மதம் மாறியவர்களுக்குப் பட்டியலினச் சமூகத்தினர் அந்தஸ்து
October 12 , 2022 1179 days 475 0
முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட ஒரு ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இது "வரலாற்று ரீதியாக அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆனால் புதிதாக இந்து, பௌத்தம் மற்றும் சீக்கியம் மதம் தவிர மற்ற மதங்களுக்கு மாறிய நபர்களுக்கு" பட்டியலினச் சமூகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை வழங்கச் செய்திடுவதைப் பரிசீலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் 341வது பிரிவின் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவர் உத்தரவுகளுக்கு இணங்க இந்த ஆணையம் இந்த விவகாரத்தை ஆராயும்.
அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950 என்பதுஇந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட மதத்தைத் தழுவிய எந்த ஒரு நபரும் ஒரு அட்டவணைச் சாதியின் உறுப்பினராக கருதப் படக்கூடாது என்று குறிப்பிடுகிறது.
இந்துக்கள் மட்டுமே வகைப்படுத்தப்பட்ட இந்த அசல் ஆணை பின்னர் சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது.