அறிவியலாளர்கள் முதன்முறையாக மதராஸ் முள்ளெலியின் இனம் குறித்த புதிய அறிவியல் தரவுகளை வழங்குகின்ற மைட்டோகாண்ட்ரியல் மரபணு பகுப்பாய்வை நிறைவு செய்துள்ளனர்.
இந்த ஆய்வு அதன் மரபணு அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சையைப் புரிந்து கொள்ள உதவுகின்ற முழுமையான மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வை பகுப்பாய்வு செய்துள்ளது.
மெட்ராஸ் முள்ளெலி இனம், இந்திய முள்ளெலியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
தெற்காசியாவில் ஏற்பட்ட பெரிய பருவநிலை மாற்றங்களின் போது, சுமார் 3.69 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு இனங்களும் தனித்தனியாகப் பிரிந்தன.
இந்த மரபணுவில் 13 புரதக் குறியீட்டு மரபணுக்கள், 22 tRNA-க்கள் மற்றும் 2 ரிபோசோமல் rRNA-க்கள் உள்ளன.