மக்களிடையே மதி இறுக்க நோய் (autism) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
இந்த நோயினை உடைய மக்கள் பெருமை கொள்வதன் முக்கியத்துவத்தையும், இந்த பரந்து விரிந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதில் அதன் பங்கினையும் இந்த தினம் அங்கீகரிக்கிறது.
இந்த தினமானது வானவில் வண்ணங்களுடன் கூடிய ஒரு முடிவிலி சின்னத்தினால் குறிப்பிடப் படுகிறது.
மதி இறுக்க நோயுடைய மக்களிடம் இருக்கும் எண்ணற்ற சாத்தியக் கூறுகளை இந்தச் சின்னம் குறிக்கிறது.
இந்த தினமானது ஆஸ்பிஸ் ஃபார் பீரிடம் (Aspies for Freedom) எனும் அமைப்பின் முயற்சினால் 2005 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் முதன்முறையாக கடைபிடிக்கப் பட்டது.