IPCC AR6 அறிக்கைக்குப் பிந்தைய (மதிப்பீட்டு அறிக்கை 6) புதுப்பிப்பு ஆனது ஒரு சக துறையினால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வாகும்.
இது இந்தியாவின் கண்காணிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்டப் பருவநிலை மாற்றங்கள் குறித்த சமீபத்திய மதிப்பீட்டை வழங்குகிறது.
இது இந்தியாவிற்கான குறிப்பிட்ட புதிய கண்காணிப்பு தரவு மற்றும் மேம்பட்ட பருவ நிலை மாதிரிகளைப் பயன்படுத்தி, பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை (AR6) அடிப்படையாகக் கொண்டது.
1901–1930 ஆம் காலக் கட்டத்துடன் ஒப்பிடும் போது 2015–2024 ஆம் காலக் கட்டத்தில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 0.9°C அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஆண்டின் வெப்பமான நாள் ஆனது 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து 1.5–2°C ஆக வெப்பமடைந்துள்ளது என்பதோடுஇது அடிக்கடி நிகழும் மற்றும் கடுமையான வெப்ப அலைகளுக்கு வழி வகுக்கிறது.
இந்திய-கங்கை சமவெளிகள் மற்றும் வடகிழக்கில் சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் தென் மேற்கு பருவமழை ஒழுங்கற்றதாக மாறியுள்ளது.
மத்திய இந்தியா மற்றும் கடலோர குஜராத்தில் அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் தீவிரமடைந்துள்ளன.
வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் ஆனது தசாப்தத்திற்கு 0.12°C வீதத்தில் வெப்பம் அடைகிறது.
இந்த வெப்பமயமாதல் ஆனது, கடல் வெப்ப அலைகளைச் சமீபத்திய தசாப்தங்களில் ஆண்டிற்கு 20 நாட்களில் இருந்து 2050 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 200 நாட்களாக அதிகரிக்கச் செய்கிறது என்பதோடுஇது பவளப்பாறைகள் மற்றும் மீன்வளத்தை அச்சுறுத்துகிறது.
ஆசியாவின் "நீர் கோபுரங்கள்" என்று அழைக்கப்படும் இந்து குஷ் இமயமலை பனிப் பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
1.5–2°C என்ற வரம்பிலான புவி வெப்பமடைதலின் கீழ் 2100 ஆம் ஆண்டிற்குள் பனிப் பாறை அளவு 30–50% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் எழும் வெப்பமண்டலப் புயல்கள் வலுவடைந்துள்ளன என்பதோடுஇதனால் சமீபத்திய தசாப்தங்களில் அதிகபட்சப் புயல் தீவிரம் 40% அதிகரித்துள்ளது.