TNPSC Thervupettagam

மதிப்பு மிக்கப் பயண விருதுகள்

December 21 , 2025 15 hrs 0 min 10 0
  • ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2025 ஆம் ஆண்டு டிராவல் + லெஷர் இந்தியா & தெற்காசியா விருதுகளில் சிறந்த உள்நாட்டு விமான நிறுவன விருதினை வென்றது.
  • இந்த விருது முற்றிலும் பயணிகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையில் இது சேவையின் தரம், சௌகரியம், நம்பகத் தன்மை மற்றும் ஒட்டு மொத்தப் பயண அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது.
  • ஏர் இந்தியா நிறுவனம் 570 புதிய விமானக் கொள்முதல்கள் மற்றும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
  • அந்த விருதுகளில், உலகளாவியப் பயணிகள் வாக்குகளின் அடிப்படையில், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் 2025 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டது.
  • பயணிகள் சௌகரியம், புதுமையான வடிவமைப்பு, உள்ளகத் தோட்டங்கள், உலகின் மிக உயரமான உள்ளக நீர்வீழ்ச்சி மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஓய்வு மண்டலங்களுக்காக சாங்கி விமான நிலையம் இந்த விருதினைப் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்