மதிப்புமிக்க முன்னணி இந்திய நிறுவனங்கள் அறிக்கை 2023
October 5 , 2023 756 days 528 0
கண்ட்டார் பிராண்ட்ஸ் என்ற அமைப்பானது, 10வது மதிப்புமிக்க 75 முன்னணி இந்திய நிறுவனங்கள் அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க இந்திய நிறுவனமாக திகழ்கிறது.
HDFC வங்கி இரண்டாவது மதிப்பு மிக்க நிறுவனமாகவும் தொடர்ந்து இன்ஃபோசிஸ் (3வது இடத்திலும்), ஏர்டெல் (4வது இடத்திலும்) மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி (5வது இடத்திலும்) ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
மொத்த நிறுவன மதிப்பின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட மிகப்பெரிய பிரிவு நிதிச் சேவைகள் ஆகும்.
எண்ணிமப் பண வழங்கீட்டுச் சேவை செயலியான PhonePe (21வது இடம்) முன்னணி இடத்தினைப் பெற்ற புதிய நிறுவனமாகும்.