மதிய உணவுத் திட்டத்தின் கீழ் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் மாணவர்களுக்கு நிதி உதவியை வழங்குவதற்கான முன்மொழிதலுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிசாங்க்” அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேச நிர்வாகங்களுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் நிதியினை மத்திய அரசு வழங்கும்.
இந்தியாவிலுள்ள 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒருமுறை பயனளிக்கும் ஒரு சிறப்பு நலத் திட்டமாக இது விளங்கும்.