TNPSC Thervupettagam

மதுபானங்கள் மீதான சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை

August 9 , 2026 4 days 44 0
  • மதுபான விற்பனை மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வையை விதிப்பதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் தீர்வை மதுபான பாட்டில்கள் மற்றும் கொள்கலன்களின் மறுசுழற்சி, பாதுகாப்பான அகற்றம் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றிற்கு நிதியளிக்கும்.
  • இதன் மூலம் கிடைக்கும் வருவாய், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மது மீட்பு திட்டங்களுக்கும் வாழ்வாதார உதவிக்கும் பயன்படுத்தப்படும்.
  • மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுபான கொள்கலன்களை முறையற்று அகற்றுதல் குறித்த பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கும் இது நிதியளிக்கும்.
  • காடுகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
  • 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (VAT) சட்டத்தில் திருத்தம் செய்ய இந்த மசோதா முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்