மத்திய மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இணையவழிக் கல்விப் படிப்பிற்காக வேண்டி ‘மத்சய சேது’ எனும் ஒரு கைபேசி செயலியை வெளியிட்டார்.
இந்த செயலியானது புவனேஷ்வரிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியினை ஹைதராபாத்திலுள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் வழங்கியது.
நாட்டின் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு சமீபத்திய நன்னீர் மீன்வளர்ப்புத் தொழில் நுட்பங்களை வழங்குவதே இந்த செயலியின் முதன்மை நோக்கமாகும்.