அதிக அளவிலான மத்திய அரசின் திட்டங்களைக் கொண்ட இந்தியாவின் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது.
வலுவான தொழில்துறை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு ஆதரவுடன், சுமார் ₹5.5 டிரில்லியன் மதிப்பிலான 215 திட்டங்களுடன் இது முன்னிலையில் உள்ளது.
180 திட்டங்களுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் 141 திட்டங்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
உற்பத்தி மற்றும் தளவாடப் பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் ₹4.3 டிரில்லியன் மதிப்பிலான 127 திட்டங்களுடன் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை தலா 125 திட்டங்களைக் கொண்டுள்ளன, என்ற ஒரு நிலைமையில் இது மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் காட்டுகிறது.