மத்திய ஆசியப் பாலூட்டிகள் முன்னெடுப்பு (CAMI) என்பது புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு உடன்படிக்கையின் (CMS) கீழான ஒரு பன்னாட்டு வளங் காப்புத் திட்டமாகும்.
2014 ஆம் ஆண்டில் ஈக்வடாரின் குயிட்டோவில் நடைபெற்ற CMS உடன்படிக்கையின் 11வது பங்குதாரர்கள் (COP11) மாநாட்டில் இது தொடங்கப்பட்டது என்பதோடுமேலும் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் காந்திநகரில் நடைபெற்ற COP13 மாநாட்டில் திருத்தப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது மத்திய ஆசியா முழுவதும் பதினேழு இடம்பெயர்வு மற்றும் இடம் விடு இடம் மாறுகின்ற பாலூட்டி இனங்களைப் பாதுகாக்கிறது.
முதன்மை இனங்களில் பனிச் சிறுத்தை, சைகா மான், காட்டு ஒட்டகம், புகாரா மான் மற்றும் பாரசீக சிறுத்தை ஆகியவை அடங்கும்.
CAMI ஆனது பன்னாட்டு ஒத்துழைப்பு, தரவுப் பகிர்வு மற்றும் நேரடியான நடமாட்டத் தடைகளை நீக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.