மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) பொது நிர்வாகச் சட்டம் 2026
April 12 , 2026 15 hrs 0 min 6 0
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) சட்டம், 2026-ஐ அரசு அறிவித்துள்ளது.
இச்சட்டம் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) ஆள்சேர்ப்பு மற்றும் சேவை விதிகளுக்கு ஒரே மாதிரியான அமைப்பை உருவாக்குகிறது.
இது CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை), BSF (எல்லைப் பாதுகாப்புப் படை), CISF (மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை), ITBP (இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை) மற்றும் SSB (சஷஸ்த்ர சீமா பால்) போன்ற படைகளை உள்ளடக்கியது.
காவல்துறைத் தலைவர் பதவிகளில் 50 சதவீதமும், கூடுதல் கூடுதல் தலைமை இயக்குநர் பதவிகளில் குறைந்தபட்சம் 67 சதவீதமும் இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளை அயற்பணியில் நியமிப்பதன் மூலம் நிரப்பப்படும்.
முந்தைய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி விதிகளை வகுக்க இச்சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தேசியப் பாதுகாப்பு, எல்லை மேலாண்மை மற்றும் உள்நாட்டுச் சட்ட அமலாக்கத்தில் CAPF முக்கியப் பங்கு வகிக்கிறது.