மத்திய இரயில்வே நிர்வாகத்தின் மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி ஆலை
July 9 , 2024 397 days 240 0
மத்திய இரயில்வே (CR) நிர்வாகமானது மகாராஷ்டிராவின் இகத்புரி ஏரியில் மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி தகடுகளை நிறுவ உள்ளது என்ற நிலையில் இது இந்திய இரயில்வே நிர்வாம் மேற்கொள்ளும் முதல் வகையான முன்னெடுப்பாகும்.
இந்த முன்னெடுப்பானது மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமின்றி பெருமளவில் தண்ணீரையும் சேமிக்கும்.
இகத்புரியில் உள்ள இரயில்வே நிர்வாக நீர்த்தேக்கம் ஆனது 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1,206 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது.
இந்த மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி ஆலை ஆனது 10 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும்.