TNPSC Thervupettagam

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம்

October 15 , 2021 1347 days 556 0
  • இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான தொலைநோக்குத் திட்டமானது (2021-2031) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தத் தொலைநோக்குத் திட்டமானது இந்திய உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தினை வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பாகும்.
  • இது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமானது நாட்டின் உயிரிப் பன்முகத் தன்மையைக் குறிப்பாக, 1998 ஆம் ஆண்டு தேசிய உயிரியல் பூங்கா கொள்கையின் படி விலங்கினங்களைப் பாதுகாப்பதில் நாட்டின் முயற்சியைப் பூர்த்தி செய்வதும் வலுப்படுத்துவதுமே ஆகும்.

முக்கியப் பணிகள்

  • இது இந்திய உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் சுகாதார நலனுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை விதிக்கிறது.
  • நாட்டிலுள்ள ஒவ்வோர் உயிரியல் பூங்காவும் தனது செயல்பாட்டிற்காக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
  • இந்த ஆணையத்தினால் உயிரியல் பூங்காக்களின் அங்கீகாரத்தினைத் திரும்ப பெறவும் இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்