மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் மத்திய கருவிகள் அடையாள பதிவேட்டைத் (Central Equipment Identity Register - CEIR) தொடங்கினார்.
நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் கைபேசிகளின் திருட்டு மற்றும் அவற்றை நகலாக்கம் செய்தல் ஆகியவற்றைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
CEIR என்பது ஒவ்வொரு கைபேசிச் சாதனத்திற்கும் தனித்துவ அடையாளமான 15 இலக்க எண்களைக் கொண்ட சர்வதேச கைபேசி கருவி அடையாளங்களின் (International Mobile Equipment Identities - IMEIs) தரவுத் தளமாகும்.
இந்தத் திட்டம் மகாராஷ்டிராவில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுப் பின்னர் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கின்றது.