இது 11 கலால் சட்டங்களை ஒரே கட்டமைப்பாக ஒன்றிணைத்த 1944 பிப்ரவரி 24 அன்று இயற்றப்பட்ட மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டத்தை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
மத்திய கலால் வரி என்பது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப் படும் மறைமுக வரியாகும்.
2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், பெட்ரோலியம் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது, மத்திய கலால் வரி, சுங்க வரி மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
CBIC ஆனது, நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படுகிறது.