TNPSC Thervupettagam

மத்திய கிழக்கு மோதலின் ஆசிய-பசிபிக் மீதான தாக்கங்கள்

April 17 , 2026 14 hrs 0 min 33 0
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமானது (UNDP), "Military Escalation in the Middle East: Human Development Impacts Across Asia and the Pacific" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
  • மத்திய கிழக்கில் ஏற்படும் இராணுவ விரிவாக்கம் ஆசியா மற்றும் பசிபிக் முழுவதிலும் உள்ள மனித வளர்ச்சியைப் பாதிக்கிறது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • உயர்ந்து வரும் எரிபொருள் போக்குவரத்து மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் வாங்கும் திறனைக் குறைத்து உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிக்கின்றன மற்றும் அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
  • பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பாகிஸ்தானின் ஆதரவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் உற்பத்தி இழப்புகள் $97-299 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3-0.8%) என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் தெற்காசியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 8.8 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படலாம், ஈரானில் இதன் முக்கிய தாக்கம் இருக்கும்.
  • குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் அதிக வேலையின்மையை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மோதல் தொடர்ந்தால் மனித வளர்ச்சி முன்னேற்றம் கணிசமாகக் குறையக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்