மத்திய குடிமைப் பணி தேர்வில் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள்
April 26 , 2022 1197 days 481 0
குடிமைப் பணியின் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி விண்ணப்ப தாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் அனுமதி அளித்துள்ளது.
இந்திய இரயில்வே பாதுகாப்புப் படைப் பணி (IRPFS), இந்தியக் காவல்துறைப் பணி ஆகியவற்றுடன் சேர்த்து டெல்லி, டாமன் & டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு காவல் பணி ஆகியவற்றிற்கும் அவர்கள் தற்போது தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.