இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதில் மத்திய சேமக் காவல் படையின் (CRPF) சேவை, தியாகம் மற்றும் பங்களிப்புகளை கௌரவிப்பதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1939 ஆம் ஆண்டில் அரசின் பிரதிநிதிகளின் காவல்துறை என நிறுவப்பட்டது, பின்னர் 1949 ஆம் ஆண்டில் மத்திய சேமக் காவல் படை (CRPF) என மறுபெயரிடப் பட்டது.
இது உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையாகும் (CAPF).
கிளர்ச்சி எதிர்ப்பு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கலவரக் கட்டுப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் CRPF முக்கியப் பங்காற்றுகிறது.
2,255-க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் சேவையில் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர், அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சௌர்யா சக்ரா போன்ற வீரதீர விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.