முதல் முறையாக மிக முக்கிய நபர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் மத்திய சேமக் காவல் படையில் பயிற்சி பெற்ற மகளிர் படைப் பிரிவானது Z-Plus வகைப் பாதுகாப்பு அளிக்கப் பட்ட நபர்களுக்கான பணியில் ஈடுபடுத்தப் படும்.
மத்திய சேமக் காவல் படையானது தனது VIP பாதுகாப்புப் பிரிவில் 32 மகளிர் கமாண்டோக்கள் கொண்ட படைப்பிரிவினர் அடங்கிய தனது முதல் படையை உருவாக்கியது.
இந்த மகளிர் படைப் பிரிவினர் புதுடெல்லியில் Z+ தரத்திலான ஒரு பாதுகாப்பினைப் பெறும் நபர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப் படுவர்.