மத்திய சேமக் காவல் படையின் 83வது எழுச்சி தினம் - மார்ச் 19
March 22 , 2022
1243 days
522
- ஜம்மு நகரில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் 83வது எழுச்சி தின அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மத்திய சேமக் காவல் படை தனது எழுச்சி தினத்தை இந்தியாவின் தேசியத் தலைநகருக்குப் பதிலாக வேறு ஒரு நகரில் கொண்டாடியது இதுவே முதல் முறை ஆகும்.
- மத்திய சேமக் காவல் படை ஆனது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று ஒரு அரசப் பிரதிநிதியின் காவல்துறைப் பிரிவாக நடைமுறைக்கு வந்தது.
- 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று மத்திய சேமக் காவல் படைச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் மத்திய சேமக் காவல் படை என்று பெயர் மாற்றப்பட்டது.

Post Views:
522