இந்தியாவின் முதல் மத்திய திசு வங்கியானது டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (MAIDS) தொடங்கப்பட்டது.
இது நோயாளிகளுக்கு நேரடியாக திசு மற்றும் எலும்பு ஒட்டுக்களை வழங்குவதன் மூலம், வெளிப்புற மூலங்களிலிருந்து இவற்றை வாங்க வேண்டிய தேவையை நீக்குகிறது.
இதனுடன், டெல்லி பல் மருத்துவ சபையானது (DDC) பணமில்லா "V-Office" எனும் மெய்நிகர் அலுவலக முறையை செயல்படுத்தி, அத்தகைய வசதியை நிறுவிய முதல் மாநிலப் பல் மருத்துவ சபையாக அமைகிறது.