மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொது நிறுவனங்கள் துறை
July 9 , 2021 1503 days 568 0
மத்திய அரசானது கனரகத் தொழில்துறை மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தைப் பிரித்து பொது நிறுவனங்கள் துறையினை மத்திய நிதி அமைச்சகத்தினுடைய நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் தனியார் மயமாக்கல், சொத்துக்களைப் பணமாக்குதல் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் மூலதன செலவினத் திட்டங்கள் போன்றவை சீரமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப் படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது நிறுவனங்கள் துறையானது நிதி அமைச்சகத்தின் ஆறாவது துறையாக மாறியுள்ளது.