TNPSC Thervupettagam

மத்திய நிதிநிலை அறிக்கை 2022-2023 - சிறப்பம்சங்கள்

February 3 , 2022 1207 days 600 0
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
  • இது இந்தியாவின் இரண்டாவது காகிதமற்ற நிதிநிலை அறிக்கையாகும்.

சிறப்பம்சங்கள்

  • பிளாக்செயின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எண்ணிம (டிஜிட்டல்) நாணயம் வெளியிடப்பட உள்ளது.
  • இ-பாஸ்போர்ட் (இணைய வழியிலான கடவுச் சீட்டு) வழங்குதல்.
  • தேசிய தொலைத்தொடர்பு மனநலத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • சுழிய அளவிலான புதைபடிவ எரிபொருள் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
  • அரசின் ஆதரவு பெற்ற பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.
  • இந்தியாவின் வளர்ச்சி: 9.2% என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைக் குறைப்பதற்காகவும் வேண்டி எண்ணெய் வித்துக்களுக்கான திட்டம் தொடங்கப் படும்.
  • பிரதான் மந்திரி கதி சக்தி முதன்மைத் திட்டம் 25,000 கி.மீ. வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட உள்ளன
  • மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்