சமீபத்தில் இந்திய அரசானது லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசங்களுக்காக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (CAT - Central Administrative Tribunal) 18வது அமர்வைத் தொடங்கி வைத்துள்ளது.
இந்தத் தீர்ப்பாயமானது பொதுப் பணியாளர்களின் பணிநிலைமைகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க இருக்கின்றது.
CAT ஆனது ஒரு உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போன்றே தனது அதிகாரத்தைப் பயன்படுத்த அதிகாரமளிக்கப் பட்டுள்ளது.
இது நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம், 1985 என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.