26வது மத்திய மண்டல மன்றக் கூட்டம் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியிலுள்ள ஜக்தல்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம் (யோகி ஆதித்யநாத்), மத்தியப் பிரதேசம் (மோகன் யாதவ்), உத்தரகாண்ட் (புஷ்கர் சிங் தாமி) மற்றும் சத்தீஸ்கர் (விஷ்ணு தியோ சாய்) ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் பஸ்தரில் நடைபெறுவதற்கு முன்பாக பஸ்தர் பகுதி முழுவதும் நக்சல் இல்லாத பகுதியாக மாறியது.
இந்த மண்டலம் வடக்கே இமயமலைப் பகுதியிலிருந்து கங்கைச் சமவெளி வரையிலும், மேலும் காடுகள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த மத்திய இந்தியாவின் பீடபூமிப் பகுதிகள் வரையிலும் பரவியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஏறக்குறைய ஏழு மாநிலங்களை இணைப்பதால், இந்த முழு மத்திய மண்டலத்திற்கும் மகத்தான மூலோபாய முக்கியத்துவம் கிடைக்கிறது.