மத்தியப் பட்டு வாரியத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா
October 2 , 2024 330 days 320 0
மத்தியப் பட்டு வாரியம் (CSB) ஆனது அதன் 75வது (பவள விழா) ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டத்தை மேற்கொள்கிறது.
CSBயானது பவள விழாவை முன்னிட்டு அதற்கான நினைவு நாணயம் வெளியிடப் பட்டது.
மத்தியப் பட்டு வாரியம் என்பது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
CSBயானது பயிற்சிகள், பயிலரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நிதி உதவிகள் மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலம் நாட்டில் உள்ள பட்டு வளர்ப்பு பங்கு தாரர்களுக்குப் பயனளித்து வருகிறது.
நாட்டில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் பட்டுப்புழு வளர்ப்பை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு அதனைச் சார்ந்துள்ளனர்.