மத்தியப் பிரதேச அரசின் புலிகள் வளங்காப்பிற்கான உத்தி
August 9 , 2023 768 days 463 0
வேட்டையாடும் விலங்கினங்கள் மற்றும் அதன் இரைகளின் எண்ணிக்கையை நன்கு சமநிலைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையானது, மத்தியப் பிரதேசத்திலுள்ள புலிகளின் எண்ணிக்கையில் பதிவான 50% அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது.
இது 2022 ஆம் ஆண்டு பெரும்பூனை இனங்களின் கணக்கெடுப்பில் இந்த மாநிலம் முதலிடத்தைப் பிடிக்க உதவியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு ஆப்பிரிக்கச் சிறுத்தைகளை இடமாற்றம் செய்யும் திட்டத்தின் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட விலங்குகளில் ஆறு விலங்குகள் இறந்து விட்டதையடுத்து இத்திட்டம் பின்னடைவைக் கண்டுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் மீதான புதுப்பிக்கப் பட்ட தகவல் அறிக்கையில் தேசிய அளவில் 3,682 புலிகள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது.
கடந்த மூன்று புலிகள் கணக்கெடுப்புகளில், இரண்டாவது முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 785 புலிகள் பதிவாகியுள்ளது.
முந்தையப் புலிகள் கணக்கெடுப்பில் இருந்து, இந்த மாநிலத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மிகக் குறைவாக 54 புலிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் மட்டுமே அதனை விட ஒரு எண்ணிக்கை அதிக உயர்வு என்பது பதிவாகியுள்ளது.