மத்தியப் பிரதேசத்தின் கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள்
May 8 , 2020 1933 days 763 0
மத்தியப் பிரதேச மாநிலக் காவல் துறையானது அதன் மூத்தக் குடிமக்களுக்கு 24 மணி நேரமும் உதவியளிப்பதற்காக “சங்கல்ப் திட்டம்” என்ற ஒன்றைத் தொடங்கி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய அளவில் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக “ஜீவன் அம்ரித் யோஜனா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இந்த யோஜனாவின் கீழ், அம்மாநில அரசானது ஆயுஷ் துறையினால் தயாரிக்கப்பட்ட “திரிகுத் சூரணம்” (மூன்று மிளகுகள்) என்ற ஒரு ஆயுர்வேதப் பொருளை அதன் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க இருக்கின்றது.
மத்தியப் பிரதேச மாநில அரசானது ஜீவன் சக்தி யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறப் பகுதிகளில் இருக்கும் பெண்கள் முகவுறைகளைத் தயார் செய்து, அதன் மூலம் இலாபம் ஈட்ட இருக்கின்றனர்