மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் வனவிலங்குச் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு அரிய வகை கராகல் என்ற காட்டுப் பூனை தென் பட்டது.
கராகல்கள் ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர அளவிலான காட்டுப் பூனைகளாகும்.
இரவில் வாழக் கூடிய, தனியாக வேட்டையாடும் இவை வறண்ட புதர்க் காடுகள், பகுதி அளவு வறண்ட மண்டலங்கள் மற்றும் ஈரப்பதமான வனப்பகுதிகளை விரும்புகின்றன.
இந்த இனமானது இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனமாகவும் பட்டியலிடப்பட்டு உள்ளது.