TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேசத்தில் சிறு தானியக் கொள்முதல்

October 24 , 2025 12 days 55 0
  • மத்தியப் பிரதேச அமைச்சரவையானது முதன்முறையாக கோடோ மற்றும் குட்கி சிறு தானியங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  • இராணி துர்காவதி ஸ்ரீ-அன்ன புரோட்சஹான் யோஜனா திட்டத்தின் கீழ் ஜபல்பூர், கட்னி, மண்டலா மற்றும் பிற மாவட்டங்களில் கொள்முதல் மேற்கொள்ளப்படும்.
  • ஸ்ரீ அன்ன கூட்டமைப்பு ஆனது குட்கிக்கு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் மற்றும் கோடோவுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் என்ற விலையில் 30,000 மெட்ரிக் டன் சிறு தானியங்களை வாங்கும்.
  • விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பண பரிமாற்றம் மூலம் குவிண்டாலுக்கு 1,000 ரூபாய் என்ற கூடுதல் ஊக்கத்தொகையைப் பெறுவர்.
  • சோயா அவரை விவசாயிகளுக்கான விலைப் பற்றாக்குறை ஈடு செலுத்தும் திட்டம் (பவந்தர் திட்டம்) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை (குவிண்டாலுக்கு 5,238 ரூபாய்) மற்றும் மாதிரி/சந்தை விகிதத்திற்கு இடையிலான வேறுபாடு DBT மூலம் செலுத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்