அடுத்த பருவமழைக்கு முன்னதாக நௌராதேஹியில் உள்ள வீராங்கனை துர்காவதி புலிகள் சரணாலயம் சிவிங்கிப் புலிகளின் வாழ்விடமாக உருவாக்கப்படும் என்று மத்தியப் பிரதேசம் அறிவித்துள்ளது.
குனோ தேசியப் பூங்கா (ஷியோபூர்) மற்றும் காந்தி சாகர் சரணாலயம் (மாண்டசௌர்) ஆகியவற்றிற்குப் பிறகு மாநிலத்தின் மூன்றாவது சிவிங்கிப் புலிகள் சரணாலயமாக இது இருக்கும்.
குனோ தேசியப் பூங்காவில் தற்போது 28 சிவிங்கிப் புலிகள் உள்ளன; காந்தி சாகர் சரணாலயத்தில் 2 சிவிங்கிப் புலிகள் உள்ளன.
சிவிங்கிப் புலிகளின் வளங்காப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போட்ஸ்வானாவிலிருந்து மேலும் எட்டு சிவிங்கிப் புலிகள் இட மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
1950 ஆம் ஆண்டுகளில் ஆசிய சிவிங்கிப் புலிகள் அழிந்த பிறகு உலகளவில் சிவிங்கிப் புலிகளை வெற்றிகரமாக மறு அறிமுகம் செய்த ஒரே நாடாக இந்தியா உள்ளது.