TNPSC Thervupettagam

மத்தியப் புலனாய்வுத் துறையின் வைர விழா கொண்டாட்டம்

April 7 , 2023 851 days 438 0
  • மத்தியப் புலனாய்வுத் துறையானது, ஏப்ரல் 01 ஆம் தேதியன்று தனது 60வது ஆண்டு விழாவினைக் கொண்டாடுகிறது.
  • மத்தியப் புலனாய்வுத் துறையின் வைர விழாக் கொண்டாட்ட ஆண்டினை நினைவு கூரும் வகையில், அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவை வெளியிடப் பட்டது.
  • மத்தியப் புலனாய்வுத் துறையானது, 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது.
  • மத்தியப் புலனாய்வுத் துறையானது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு அல்ல.
  • 1946 ஆம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்திலிருந்து அது விசாரணை அதிகாரத்தைப் பெறுகிறது.
  • மத்தியப் புலனாய்வுத் துறையினை அமைப்பது குறித்து ஊழல் தடுப்பு தொடர்பாக அமைக்கப் பட்ட சந்தானம் குழு (1962-1964) பரிந்துரைத்து செய்து இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்