மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைந்த இணைய தளம்
April 19 , 2023 852 days 351 0
மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (CBN) ஒரு ஒருங்கிணைந்த இணைய தளத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதோடு, மருந்துத் தொழில் துறையின் வர்த்தக உரிமம் பெறுவதற்கு ஆகும் நேரத்தைக் குறைக்கும்.
இது செயலாக்க நேரத்தை மிகவும் கடுமையாக குறைத்துப் பிற பயனுள்ள வணிக நடவடிக்கைகளுக்கான வர்த்தக வளங்களைப் பாதுகாக்கும்.
மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு உடன்படிக்கைகள் மற்றும் 1985 ஆம் ஆண்டு போதைப் பொருள் மற்றும் மன நோய் சார்ந்த மருந்துகள் சட்ட விதிகளின் கீழ் போதை மருந்துகள், மன நோய் சார்ந்த மருந்துகள் மற்றும் முதன்மை நிலைப் பயன்பாட்டு இரசாயனங்கள் ஆகியவற்றின் சர்வதேச வர்த்தகத்தைக் கையாள்கிறது.