காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமானது (Bureau of Police Research and Development – BPR&D) அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகத்துடன் இணைந்து ‘மந்தன் 2021’ எனப்படும் இணைய தள ஹேக்கத்தானைத் தொடங்கியுள்ளது.
புலனாய்வு அமைப்புகளால் எதிர்கொள்ளப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமைமிக்க கருத்துக்களையும் தொழில்நுட்பத் தீர்வுகளையும் அடையாளம் காணச் செய்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
BPR&D அமைப்பானது 1970களில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
காவல்துறையினை மிகுந்த நவீனமயமாக்கும் ஒரு முதன்மையான நோக்கத்தோடு இது தொடங்கப் பட்டது.
AICTE என்பது தொழில்நுட்பக் கல்விக்குக் கிடைக்கப் பெறும் வசதிகள் குறித்த ஒரு ஆய்வினை நடத்துவதற்கும் ஒருங்கிணைந்த முறையில் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான ஒரு தேசிய அளவிலான உயர்மட்ட ஆலோசக அமைப்பாகும்.