September 26 , 2025
15 hrs 0 min
22
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது மன மித்ரா எனப்படும் வாட்ஸ்அப் அடிப்படையிலான நிர்வாக தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- சேவைகளைப் பெறுவதற்கான அதன் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 9552300009 ஆகும்.
- மன மித்ரா அதன் முதல் கட்டத்தில் 36 துறைகளில் 161 பொதுச் சேவைகளை வழங்கும்.
- மன மித்ராவின் இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக 360 சேவைகள் சேர்க்கப்படும்.
- இந்தத் தளத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆந்திரப் பிரதேச அரசாங்க வலைத் தளத்துடன் இணைக்கப்பட்ட QR குறியீட்டைக் கொண்டிருக்கும்.
- முழு அளவிலான வாட்ஸ்அப் நிர்வாகத்தை செயல்படுத்திய உலகின் முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.
Post Views:
22