மனநிலை பாதிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனநோய் மீதான முதல் தேசியக் கருத்தரங்கம்
April 7 , 2018 2713 days 859 0
மனநிலை பாதிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனநோய் மீதான முதல் தேசியக் கருத்தரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது.
இரு நாள் நடக்கும் கருத்தரங்கை உளவியல் துறை (Department of psychiatry) மற்றும் எய்ம்ஸ் உடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கூட்டிணைந்து நடத்தியது.
இந்தியக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்தில் உளவியல் பாதிப்பு மற்றும் மனநோய் ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்காக, ஆராய்ச்சிக்கான விரிவான தொகுப்புப் பணிக்கான கூறுகள் மற்றும் மருத்துவ செயல்முறைகள் ஆகியவற்றை வழங்குவதை இக்கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டது.