மனாஸ் தேசியப் பூங்கா – புலி மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை
March 11 , 2022 1263 days 473 0
அசாமிலுள்ள மனாஸ் தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள் மற்றும் காண்டாமிருங்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 48 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 60க்கும் மேல் உயரும் என தேசியப் பூங்காவின் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தப் பூங்காவின் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
யுனெஸ்கோவின் உலக இயற்கைப் பாரம்பரியத் தளம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட மனாஸ் தேசியப் பூங்காவானது ஒரு யானைகள் காப்பகம், புலிகள் திட்டக் காப்பகம் மற்றும் உயிர்க் கோளக் காப்பகம் ஆகியனவாகும்.
அசாமின் இமாலய அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா பூடானின் ராயல் மனாஸ் தேசியப் பூங்காவின் ஒரு தொடர் பகுதியாகவும் உள்ளது.