மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10
December 13 , 2020
1613 days
1253
- இந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆண்டில் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
- இது மனித உரிமைகள் பற்றிய முதல் உலகளாவிய ஆவணமாகும்.
- அது உலகளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து மனிதர்களின் அடிப்படை உரிமைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
- 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற பொதுச் சபையின் 317வது கூட்டத்தில் மனித உரிமைகள் தினம் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆம் ஆண்டு அக்டோபரில் நிறுவப் பட்டது.
- 2020 ஆம் ஆண்டின் கருத்துரு ‘சிறந்ததை மீட்டெடுங்கள் - மனித உரிமைகளுக்காக துணை நிற்போம்’ (Recover Better - Stand Up for Human Rights) என்பதாகும்.

Post Views:
1253