மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10
December 16 , 2022
866 days
368
- இத்தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஆனது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை (UDHR) ஏற்றுக் கொண்ட தினத்தினைக் குறிக்கிறது.
- இந்த ஆண்டானது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனமானது ஏற்றுக் கொள்ளப் பட்டதன் 74வது ஆண்டு நிறைவையும் 72வது மனித உரிமைகள் தினத்தையும் குறிக்கிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: "அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி" என்பதாகும்.
- மனித உரிமைகள் சட்டமானது 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதியன்று இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது.
- இந்தச் சட்டத்தின்படி, 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆனது உருவாக்கப்பட்டது.

Post Views:
368