மனித-வனவிலங்கு மோதலை நிவர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
March 30 , 2023 870 days 381 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது மனித-வனவிலங்கு மோதலை (HWC) நிவர்த்தி செய்வதற்காக என்று 14 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மனித-வனவிலங்கு மோதலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள மற்றும் திறம் மிக்க நடவடிக்கைகள் எவை என்பது குறித்து, முக்கியப் பங்கு தாரர்களிடையே ஒரு பொதுவான புரிதலை உருவாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் இயல்பில் ஓர் ஆலோசனை வழங்கீடு சார்ந்தவையாகும் என்பதோடு இது ஓர் இடம் சார்ந்த மனித-வனவிலங்கு மோதல்களுக்கானத் தணிப்பு நடவடிக்கைகளின் உருவாக்கத்திற்கும் உதவும்.
இந்த வழிகாட்டுதல்கள் என்பவை மனித-வனவிலங்கு மோதல்களுக்கானத் தணிப்பு நடவடிக்கைகளின் இந்திய-ஜெர்மானிய ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டுள்ளன.
10 இனங்கள் சார்ந்த வழிகாட்டுதல்கள்:
யானை, காட்டெருது, சிறுத்தை, பாம்பு, முதலை, செம்முகக் குரங்கு, காட்டுப் பன்றி, கரடி, மரையான் மற்றும் புல்வாய் ஆகிய இனங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதற்கான வழிகாட்டுதல்கள்.
பல்வேறு துறை சார்ந்த சிக்கல்கள் குறித்த 4 வழிகாட்டுதல்கள்
இந்தியாவில் வனம் மற்றும் ஊடகத் துறைக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான வழிகாட்டுதல்கள்: மனித-வனவிலங்கு மோதலைத் தணிப்பதற்கான பயனுள்ள தகவல் தொடர்புகளை நோக்கிய வழிகாட்டுதல்கள்.
மனித-வனவிலங்கு மோதலைத் தணிக்கும் சூழலில் தொழில்சார் வளம் மற்றும் பாதுகாப்பு
மனித-வனவிலங்கு மோதல் தொடர்பான சூழ்நிலைகளில் கூட்ட மேலாண்மை
மனித-வனவிலங்கு மோதல் சூழ்நிலைகளில் எழும் சுகாதாரம் சார்ந்த அவசர நிலைகள் மற்றும் சாத்தியமான சுகாதாரம் சார்ந்த அபாயங்களை நிவர்த்தி செய்தல்: ஒற்றைச் சுகாதார அணுகுமுறையை மேற்கொள்தல்.