TNPSC Thervupettagam

மனித-வனவிலங்கு மோதல் குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள்

November 21 , 2025 16 hrs 0 min 13 0
  • வாழ்விடத் தரமிழப்பு, ஒழுங்குபடுத்தப்படாத சுற்றுலா மற்றும் தடைகளுடன் கூடிய வழித் தடங்களால் ஏற்படும் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுக்க உச்ச நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டில் புதிய வழிமுறைகளை வெளியிட்டது.
  • இடையக மண்டலங்களுக்குள் காடுகள் அல்லாத அல்லது சீரழிந்த வன நிலங்களில் மட்டுமே புலிகளை காண்பதற்கான பயணச் சுற்றுலாவினை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது என்பதோடு மையப் பகுதிகள் மற்றும் புலி வழித்தடங்களில் பயணச் சுற்றுலாவினை இது தடை செய்தது.
  • வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க அனைத்து மைய மற்றும் முக்கியமான புலி வாழ்விடங்களிலும் இரவு நேரச் சுற்றுலா தடைசெய்யப்பட்டது.
  • வணிகச் சுரங்கம், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், பெரிய நீர் மின் நிலையங்கள், வெளிநாட்டு உயிரினங்கள் அறிமுகம், தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மற்றும் வணிக ரீதியான விறகு சேகரிப்பு போன்ற நடவடிக்கைகள் இடையக மற்றும் விளிம்பு பகுதிகளில் தடை செய்யப் பட்டன.
  • அனைத்துப் புலிகள் வளங்காப்பகங்களுக்கான சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின், 2018 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப் பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • புலிகள் வளங்காப்புத் திட்டங்களை சரியான நேரத்தில் தயாரிக்கவோ அல்லது திருத்தவோ மற்றும் மைய மற்றும் இடையகப் பகுதிகளை 6 மாதங்களுக்குள் அறிவிக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • விரைவான நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்த மனித-மனித-வனவிலங்கு மோதல்களை ஒரு இயற்கை பேரழிவாகக் கருதுமாறு நீதிமன்றம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
  • மனித-வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் என்ற ஒரே சீரான இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
  • தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) ஆனது 6 மாதங்களுக்குள் மனித-வன விலங்கு மோதல் தணிப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கி நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்