மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினம்- ஏப்ரல் 12
April 15 , 2019 2451 days 689 0
மனிதனின் முதல் விண்வெளிப் பயணத்தை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12 ம் நாள் மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேசத் தினமாக கொண்டாடப்படுகிறது.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று சோவியத் யூனியனின் குடிமகனான லெப்டினென்ட் யூரி காகரின் மனித வரலாற்றில் முதல் முறையாக "வஸ்தோக்" விண்கலத்தில் பூமியின் சுற்றுப் பாதையில் பயணித்தார்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளின் நினைவாக 2001 ஆம் ஆண்டு முதல், உலக விண்வெளி விருந்து என்று அழைக்கப்படும் யூரியின் இரவு ஆனது உலகம் முழுவதும் ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதியும் நடைபெறுகிறது.
2011 ஏப்ரல் 7 அன்று, ஐ.நா. பொதுச் சபையானது ஏப்ரல் 12 ஐ மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேசத் தினமாக அறிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.