மனித விண்வெளிப் பயணத்திற்கானப் பன்னாட்டு நாள் - ஏப்ரல் 12
April 14 , 2021
1581 days
580
- ஐ.நா பொதுச் சபையானது ஏப்ரல் 12 ஆம் தேதியை மனித விண்வெளிப் பயணத்திற்கான பன்னாட்டு நாளாகக் கொண்டாடுவதாக அறிவித்தது.
- 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று முதலாவது மனித விண்வெளிப் பயணமானது யூரி காகரினால் மேற்கொள்ளப்பட்டது.
- சோவியத் குடிமகனான இவர் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதராவார்.
- மேலும் 1981 ஆம் ஆண்டின் ஏப்ரல் 12 ஆம் தேதியன்று கொலம்பியாவின் 1வது விண்வெளி விண்கலமான எஸ்.டி.எஸ்-1 என்ற விண்கலமானது விண்ணில் ஏவப் பட்டது.
- 1963 ஆம் ஆண்டின் ஜூன் 16 ஆம் தேதியன்று வாலண்டினா தெரஸ்கோவா பூமியைச் சுற்றி வந்த முதல் பெண்மணி ஆனார்.
- 1969 ஆம் ஆண்டின் ஜூலை 20 ஆம் தேதியன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால் வைத்த முதல் மனிதர் ஆனார்.
- அப்பல்லோ மற்றும் சோயுஸ் ஆகியவை முதல் அமெரிக்க-ரஷ்ய விண்வெளி விமானங்களாகும்.

Post Views:
580