2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பதவிக் காலம் உள்ள மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையத்தின் (NCSK - National Commission for Safai Karmacharis) பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ல் உள்ள விதிமுறைகளின்படி 1993 ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ள காலத்திற்கு மட்டுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
பின்னர் இதன் வரம்பெல்லையானது 2002 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இதன் வரம்பெல்லை 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்பட்டது.
NCSK சட்டமானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் காலாவதியானது. அதன் பின்னர் அவ்வப்போது சட்டப்பூர்வமற்ற அமைப்பாக NCSK-ன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
தற்பொழுதுள்ள NCSK ஆணையத்தின் பதவிக் காலமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கிறது.