மனிதனால் உருவாக்கப்பட்ட 2வது மிகப்பெரிய மீத்தேன் கசிவு நிகழ்வு
March 13 , 2024 437 days 386 0
தென்மேற்கு கஜகஸ்தானின் மங்கிஸ்டாவ் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய்க் கிணற்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் நடவடிக்கை ஆனது மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெரிய மீத்தேன் கசிவு நிகழ்வாகும்.
எண்ணெய்க் கிணற்றில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் நடவடிக்கை ஆனது 2023 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஒரு தீ விபத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக 127,000 டன் மீத்தேன் வளிமண்டலத்தில் வெளியானது.
மீத்தேன் ஓர் ஆற்றல் வாய்ந்த பசுமை இல்ல வாயு ஆகும்.
புதைபடிவ எரிபொருள் எடுப்புச் செயல்பாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கசிவு ஆனது மிகப்பெரிய மீத்தேன் உமிழ்வு மூலமாக உள்ளது.
மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 40% உமிழ்வானது இத்தகைய செயல்பாடுகளால் வெளியாகிறது.