மனிதனால் வெளியிடப்படும் மிக அதிக SO2 உமிழி – இந்தியா
August 20 , 2019 2314 days 944 0
நாசா மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அரசு சாரா நிறுவனமான கீரீன்பீஸ் ஆகியவற்றின் தரவின்படி, உலகின் மனித நடவடிக்கைகளால் மிக அதிக அளவில் சல்பர் டை ஆக்ஸைடை வெளியிடும் நாடு இந்தியாவாகும். இந்த சல்பர் டை ஆக்ஸைடு நிலக்கரி எரிப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஓசோன் கண்காணிப்புக் கருவியைக் கொண்ட (OMI - Ozone Monitoring Instrument) செயற்கைக் கோளினால் கண்டறியப்பட்ட மனித நடவடிக்கைகளால் சல்பர் டை ஆக்ஸைடை வெளியிடும் உலகில் உள்ள முக்கியமான பகுதிகளில் 15 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் இந்தியாவில் உள்ளன.
இரஷ்யாவில் உள்ள நூரில்ஸ்க் ஸ்மெல்டர் வளாகமானது உலகில் மிக அதிக அளவில் SO2ஐ வெளியிடும் முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது.
ஆனால் நாடுகள் வாரியாக உலக தரவரிசைப் படி, அதிகமான SO2ஐ வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மனித நடவடிக்கைகளால் SO2ஐ அதிகமாக வெளியிடும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த SO2கள் நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. உலகில் சென்னை 29 இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.