மனிதர்களை கேடயங்களாகப் பயன்படுத்துதல் மீதான சர்வதேச மனிதாபிமான சட்டம்
November 7 , 2023 653 days 384 0
பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ் அப்பாவி பாலஸ்தீனியர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், அரபு நாடுகளிலும் அது சார்ந்த நாடுகளிலும், காசா மக்கள் மற்றும் பிற பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கட்டாயமாக இடம் பெயர்த்ததைக் கண்டித்து எதிர்ப்புகள் கிளம்பின.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தில் பயன்படுத்தப்படும் ‘மனிதக் கேடயங்கள்’ என்ற சொல் ஆனது, மக்களின் இருப்பிடம் அல்லது இயக்கத்தினை குறி வைத்து அல்லது இராணுவ நடவடிக்கைகளில் இருந்து குறிப்பிட்ட போராளிக் குழுக்களை விடுவிக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற பொதுமக்கள் அல்லது பிற பாதுகாக்கப் பட்ட போது நபர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துதல் எனபது, ஒரு போர்க் குற்றமாகக் கருதப்பட்டு, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் (IHL) 97வது விதியின் படி தடை செய்யப் பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நார்வே அகதிகள் சபை ஆகியவை பொது மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுவதற்கான உத்தரவை சட்ட விரோதமானது என்று விவரித்துள்ளன.