மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டம் - 2022
August 18 , 2018 2551 days 2024 0
இந்திய பிரதமர் தனது 72வது சுதந்திரதின உரையில் இந்தியா 2022ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ என்ற திட்டத்தின் கீழ் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக கூறினார்.
இத்திட்டம் வெற்றியடைந்தால் உலகில் இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்திய நான்காவது நாடாக இடம் பிடிக்கும். முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியர் முன்னாள் இந்திய விமானப்படை (IAF) விமானியான ராகேஷ் சர்மா ஆவார்.
இன்டர் காஸ்மோஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 2, 1984ல் ஏவப்பட்ட சோவியத் யூனியனின் சோயுஸ் T-11 பயணத்தில் இவரும் ஒருவராவார்.
மனித விண்கலத் திட்டத்திற்கு தேவைப்படுகின்ற சில வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட தொழில் நுட்பங்களாவன
டிசம்பர் 2014ல் ஜி.எஸ்.எல்.வி எம்கே IIIயின் சோதனைக் கலம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
மேலும் சோதனைக் குழுவினரின் மறுநுழைவு திறன் நிரூபணச் சோதனையும் பரிசோதிக்கப்பட்டது.
ஜூன் 2017 ஜி.எஸ்.எல்.வி. எம்.கே. III யின் முதல் வளர்ச்சி பயணச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஜூலை 2018ல் குழுவின் தப்பிக்கும் அமைப்புமுறை கொண்ட முதல் பயணச் சோதனை பரிசோதிக்கப்பட்டது.