TNPSC Thervupettagam

மனிதர்கள் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை

January 16 , 2022 1274 days 456 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது மனிதர்கள் சுமந்து செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வகை ஏவுகணையை (MPATGM - Man-Portable Anti-Tank Guided Missile) வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • MPATGM ஆனது தெலுங்கானாவின் பானூரில் உள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும்..
  • MPATGM என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வகையிலான, குறைந்த எடை கொண்ட மற்றும் இயக்கிய பின் தன்னைத் தானே இலக்கை நோக்கி செல்லும் வகையில் இயக்கிக் கொள்ளும் ஒரு ஏவுகணையாகும்.
  • இது மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையாகும்.
  • இது நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையிலிருந்துப் பெறப்பட்டது.
  • ஒருங்கிணைந்த வழி காட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு தளங்களில் இருந்து இதை ஏவ முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்